புதன், ஆகஸ்ட் 29, 2012

ஊழலைப் பொறுத்தவரை காங்., பா.ஜ.க இடையே எவ்வித வேறுபாடும் இல்லை – கெஜ்ரிவால் !

Cong, BJP equally corrupt says Kejriwalடெல்லி:காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழலில் ஊறித் திளைத்தவை. ஊழலைப் பொருத்தவரை இரு கட்சிகளுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்று ‘இந்தியா எகைன்ஸ்ட் கரப்ஸன்’ அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் கூறியது: ‘நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக இரு கட்சிகளும் பாராளுமன்றத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக்
கொண்டிருக்கின்றன. காங்கிரசுக்கு மாற்று பாரதிய ஜனதா என்பதெல்லாம் முடிந்துபோன கதை. இந்த இரண்டு கட்சிகளையும் ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். அக்டோபர் 2-ம் தேதி புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும். மக்களவைத் தேர்தலில் போட்டியிட 543 நேர்மையான மனிதர்களை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல’ என்றார் கெஜ்ரிவால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக