1930-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஒஹியோ மாகாணத்தில் உள்ள கோனெட்டா என்ற சிறிய நகரில் பிறந்த ஆம்ஸ்ட்ராங் புருடியூ பல்கலைகழக்த்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த பின்னர் தன்னுடைய 30-ம் வயதி்ல் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விமானியாக பணியில் சேர்ந்தார் நீல் ஆம்ஸ்ட்ராங். பின்னர் நாஸாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஆம்ஸ்ட்ராங், நாஸா மேற்கொண்ட நிலவு குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் சந்திரனுக்கு அனுப்பட்ட அப்போல்லோ-11 விண்கலத்தில் பயணித்தார். சந்திரனுக்கு சென்று திரும்பிய பிறகு நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பபிரிவில் ஆலோசகராக பணிபுரிந்தார்.
ஆம்ஸ்ட்ராங் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் பேராசிரியராகவும் ஆம்ஸ்ட்ராங் பணியாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக