வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

மும்பை தாக்குதல் வழக்கில் ஃபஹீம் அன்ஸாரி நிரபராதி! – உச்சநீதிமன்ற தீர்ப்பில் மனைவி மகிழ்ச்சி

fahimansariwife_b_29-08-201மும்பை:26/11 மும்பை தாக்குதல் வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்ட ஃபஹீம் அர்ஷாத் அன்ஸாரி மற்றும் ஷஹாபுதீன் அஹ்மத் ஷேக் ஆகியோரை விசாரணை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்தது. இந்நிலையில் மும்பை தாக்குதல்
வழக்கின் மேல்முறையீட்டு மனுவில் பாகிஸ்தானைச் சார்ந்த அஜ்மல் கஸாபின் தூக்குத் தண்டனையை உறுதிச்செய்த உச்சநீதிமன்றம்,  ஃபஹீம் மற்றும் ஷஹாபுதீன் ஆகிய இரு இந்திய முஸ்லிம்களும் நிரபராதிகள் என்பதையும் உறுதிச்செய்தனர்.
ஃபஹீம் அன்ஸாரி குற்றமற்றவர் என்பதை துவக்கத்தில் அவரது வழக்கில் ஆஜரான கொலைச் செய்யப்பட்ட சட்டப் போராளி ஷாஹித் ஆஸ்மி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபஹீம் அன்ஸாரியின் விடுதலையைக் குறித்து அவர் மனைவி கூறியது:
“எனது கணவருக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். இந்தியாவின் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் எனது கணவர் மீதான தீவிரவாத கறை துடைத்தெறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஃபஹீம் அன்ஸாரி தற்பொழுது இன்னொரு பொய் வழக்கான 2007-ஆம் ஆண்டு உ.பி மாநிலம் ராம்பூர் சி.ஆர்.பி.எஃப் முகாமை தாக்கப்பட்ட வழக்கில் பரேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக