வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் டயர்களை எரித்தும், வாகனங்கள் மீது கற்களையும் வீசியும் சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர். கடைகள், கல்வி நிறுவனங்கள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.
ஒரு சில அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனாலும், எந்தவித வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. கொக்ரஜார், சிராங், துப்ரி மாவட்டங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு இன்னும் அமலில் உள்ளன. ராணுவம் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் கலவரத்தை ஒடுக்க மாநில அரசு விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் கூறியுள்ளார். போதுமான மத்திய படை அஸ்ஸாமிற்கு அனுப்பப்பட்டுள்ளது. சமூக நல்லிணத்தை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக