புதன், ஆகஸ்ட் 22, 2012

அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பாதுகாப்பை உறுதிச்செய்ய வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை !

k.m. shareefபுதுடெல்லி:தென்னிந்திய மாநிலங்களில் வாழும் அஸ்ஸாம் மாநில மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து என்று சில விஷக்கிருமிகள் பரப்புரைச் செய்யும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீஃப் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்னிந்திய மாநில மக்களின் பாரம்பரியத்தின் அடிப்படையில் வடக்கு, வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த அனைத்து தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை
உறுதிச்செய்வது அவர்களின் பொறுப்பாகும் என கே.எம் ஷெரீஃப் நினைவூட்டினார்.
அஸ்ஸாமில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களின் திரைமறைவில் சில வகுப்புவாத சக்திகள் சமூக நல்லிணக்கத்தை தகர்ப்பதற்காக சமூக இணையதளங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களை பயன்படுத்துவது கவலையளிக்கிறது.
ஹைதராபாத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றினார்கள் என்ற வதந்தியை பரப்பும் முயற்சிசில பொறுப்புள்ள பத்திரிகைகளின் நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது. ஹைதராபாத் சம்பவம் உள்பட வதந்திகளை பரப்புவதன் பின்னணியில் செயல்படும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கே.எம்.ஷெரீஃப் வேண்டுகோள் விடுத்தார்.
அஸ்ஸாமில் உண்மையான மனிதநேய பிரச்சனையை  திசை திருப்பும் முயற்சியாகவே சில சுயநலவாதிகள் இத்தகைய வதந்திகளை கிளப்புகின்றார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
அஸ்ஸாமில் நிகழ்ந்த இனக்கலவரம் அஸ்ஸாம் அரசின் சட்டம்-ஒழுங்கு முறை கட்டமைப்பின் முழுமையான தோல்வியாகும். அரசு நிர்வாகம், அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குடிமக்களுக்கு பாதுகாப்பை உறுதிச்செய்வதில் தோல்வியை தழுவியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பை உறுதிச்செய்வதில் தோல்வியை தழுவியவர்கள் தற்பொழுது வங்காளதேச குடியேற்றக்காரர்கள் என்ற வெறுப்பை தூண்டும் அரசியல் விளையாட்டை ஆடுவது துரதிர்ஷ்டவசமானது. எதிர்பார்த்தது போலவே, சங்க்பரிவாரம் அகதிமுகாம்களில் வங்களாள மொழி பேசும் முஸ்லிம்களுக்கு எதிராக வகுப்புவாத பிரச்சார திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கும், அவர்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு திரும்பவும் இதர அனைத்தையும் விட மாநில அரசும், மத்திய அரசும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என கே.எம்.ஷெரீஃப்கோரிக்கை விடுத்துள்ளார்.
அஸ்ஸாம் மக்களின் மறுவாழ்வு மற்றும் நிவாரண பணிகளில் நாட்டின் அனைத்து மக்களும் முன்வந்து ஒத்துழைக்குமாறு கே.எம்.ஷெரீஃப் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் மதத்தையோ, மொழியையோ பொருட்படுத்தாமல் மதம் மற்றும் பிராந்திய எல்லைகளை தாண்டி அவர்களது துயரங்களில் தேச மக்கள் பங்கேற்க வேண்டிய நேரம் இது என கே.எம்.ஷெரீப் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக