செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

எகிப்து ரஃபா எல்லையை திறந்தது !

Egypt to reopen the Rafah border crossing with Gazaகெய்ரோ:ஒரு மாத காலமாக மூடிக்கிடக்கும் கஸ்ஸாவின் ரஃபா எல்லையை எகிப்து திறந்துள்ளது. ஃபலஸ்தீன் எல்லைப் பகுதியில் உள்ள ஸினா பிரதேசத்தில் இம்மாதம் 5-ஆம் தேதி துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் 16 எகிப்திய ராணுவ வீரர்களை படுகொலைச் செய்தனர். இதனைத் தொடர்ந்து ரஃபா எல்லையை எகிப்து மூடியது. இஸ்ரேலின் அநீதிமான தடையால் துயருறும் காஸ்ஸா மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு
செல்வதற்கான ஒரே வழி ரஃபா எல்லையாகும். எல்லையை திறக்க எகிப்திய அரசும், ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் ஆளும் ஹமாஸும் ஒப்பந்தம் செய்துகொண்டன. எல்லையை அனைத்து தினங்களிலும் திறக்க முடிவுச் செய்துள்ளதாக எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று காஸ்ஸா அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.
முன்னர் வாரத்திற்கு 3 தினங்கள் மட்டுமே ரஃபா எல்லை திறக்கப்படும் என்று எகிப்து அறிவித்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக