வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

பிரதமர் பெயரில் உள்ள 6 போலி அகௌண்ட்களை பிளாக் செய்ய டுவிட்டர் ஒப்புதல் !

 Twitter Agrees Block Six Fake Pm டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் பெயரில் உள்ள போலி 6 அகௌண்டுகளை தடை செய்ய டுவிட்டர் ஒப்புக் கொண்டுள்ளது.சமூக வலைதளமான டுவிட்டரில் இந்தியாவில் மட்டும் 16 மில்லியன் அகௌண்டுகள் உள்ளன. இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் பெயரில் போலியாக 6 டுவிட்டர் அகௌண்டுகள் உள்ளன.இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் தகவல் தொடர்பு ஆலோசகர் பங்கஜ் பச்சோரி
கூறுகையில்,
பிரதமர் பெயரில் உள்ள போலி 6 அகௌண்டுகளை தடை செய்ய டுவிட்டர் ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து நாங்கள் அந்த 6 போலி அகௌண்டுகளுக்கு இமெயில் மூலம் புகார் அனுப்பினோம். இது குறித்து டுவிட்டரிடம் புகார் தெரிவித்தபோது இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் கொடுக்க உள்நாட்டு அமைச்சக வழியாக வர வேண்டும் என்றது. அதன்படி டுவிட்டர் தெரிவித்ததை மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம்.
இந்த போலி அகௌண்ட் உரிமையாளர்கள் நாட்டுக்கு வெளியேவும் இருக்கலாம் என்றார்.
பங்கஜ் பச்சோரி பிரதமரின் தகவல் தொடர்பு ஆலோசகராகப் பொறுப்பேற்ற பிறகு அவரது பரிந்துரையின்பேரில் தான் பிரமதர் டுவிட்டரில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக