செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு: பா.ஜ.க கூட்டணியில் பிளவு

NDA meeting deferred as BJP fails to convince other alliesபுதுடெல்லி:நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் பிரதமர் அளிக்கும் விளக்கத்தை கேட்டபிறகு முடிவு எடுக்கலாம் என பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகாலிதள கட்சி கூறியுள்ளது. ஆனால், இவ்விவகாரத்தில் பிரதமர் தனது பதவியை ராஜிநாமா செய்யும் வரை நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்த அனுமதிக்கப்
போவதில்லை என்ற நிலைப்பாட்டில் பாஜக உறுதியாக உள்ளது.
“நாடாளுமன்றத்தை முடக்கினால், பிரதமர் எங்கு போய் பதிலளிப்பார்? அவர் பதிலை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அகாலிதளத் தலைவர் ஹர்ஸிம்ரத் கெளர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் பிரதமர் கூறும் பதிலை நாட்டு மக்கள் கேட்பதற்கு ஆவலுடன் உள்ளனர். ஆனால் அவர் இதுவரை பேசவேயில்லை என்று அவர் கூறினார்.
ஆனால் இந்த விஷயத்தில் பிரதமர் ராஜிநாமாவைத் தவிர வேறு எதையும் ஏற்கப் போவதில்லை என பாஜக கூறிவருகிறது. அதேவேளையில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதாலேயே கூட்டணியில் பிளவு என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை என்று கெளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக