சனி, ஆகஸ்ட் 25, 2012

முடிந்தால் ராஜினாமா செய்து பாருங்கள். பாரதிய ஜனதாவுக்கு காங்கிரஸ் சவால் !

பா.ஜ.,- எம்.பி.,க்கள், ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ய விரும்பினால், தாராளமாகச் செய்யலாம்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டத் தொடரை நடக்க விடாமல், பா.ஜ., கட்சியினர் முடக்கி வருகின்றனர். 
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த,
திக்விஜய்சிங் கூறியதாவது: பா.ஜ.,- எம்.பி.,க்கள், அரசுக்கு மிரட்டல் விடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ய விரும்பினால், தாராளமாகச் செய்யலாம். ஆரவாரம் இல்லாமல், அவர்கள் இதைச் செய்ய வேண்டும்.
அப்படி ராஜினாமா செய்தால், அந்தத் தொகுதிகளில் எல்லாம், இடைத் தேர்தல் நடக்கும். அந்தத் தேர்தலில், 20 முதல் 30 இடங்களை, காங்கிரஸ் கட்சி பிடித்து விடும். பார்லிமென்டை கட்டாயப்படுத்தி, முடக்கச் செய்வதன் மூலம், பா.ஜ.,வால், எதையும் சாதித்து விட முடியாது.இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக