வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

அஸ்ஸாம் கலவரத்தை தூண்டிய ஆளும் காங். கூட்டணி கட்சி எம்.எல்.ஏ கைது !

Pradeep Brahmaகுவஹாத்தி:அஸ்ஸாமில் அண்மையில் நடந்த கலவரம் தொடர்பாக ஆளுங்கட்சி கூட்டணி எம்.எல்.ஏ பிரதீப் பிரம்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். கலவரம் பரவுவதற்கு காரணமானவர் என குற்றம் சாட்டி ஆளும் காங். கூட்டணி கட்சியான போடோலாந்து மக்கள் முன்னணியின் எம்.எல்.ஏவான பிரதீப் பிரம்மாவை போலீசார் கொக்ராஜரில் வைத்து கைது
செய்தனர்.
கலவரம் தொடர்பான ஐந்து வழக்குகளில் இவருக்கு தொடர்பிருப்பதாக போலீஸ் கூறுகிறது. இவர் மீது ஏழு வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
எம்.எல்.ஏவின் கைது கலவரம் தொடர்பாக நடந்த முதல் முக்கிய கைது நடவடிக்கை ஆகும். அஸ்ஸாம் கலவர வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்கிறது. எம்.எல்.ஏவின் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ரெயில்வே தண்டவாளங்களில் மறியலில் ஈடுபட்டனர்.
அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதால் கொக்ராஜரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அஸ்ஸாம் கலவரத்தை குஜராத் இனப்படுகொலையுடன் ஒப்பீடுச் செய்யக் கூடாது என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகோய் தனியார் தொலைக்காட்சி சானலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
குஜராத் இனப்படுகொலை அரசு ஆதரவுடன் நடத்தப்பட்டது என்றும், அதனை கட்டுப்படுத்த மாதங்கள் பல ஆகின என்று தெரிவித்த கோகோய், அஸ்ஸாம் கலவரத்தை கட்டுப்படுத்த சில வாரங்கள்தாம் தேவைப்பட்டது என குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தபோதும், மாநில அரசு முற்றிலும் மெளனம் சாதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக