வியாழன், ஆகஸ்ட் 30, 2012

ஜெர்மனியில் உலகப்போர் காலத்திய வெடிகுண்டு வெடித்ததால், மூவாயிரம் மக்கள் வெளியேற்றம் !

Germany WWII Bomb. Firefighters at the site of the bomb blast, which gutted ...ஜெர்மனியில், இரண்டாம் உலக போருக்காக தயாரிக்கப்பட்ட 250 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது.
இரண்டாம் உலக போருக்கு காரணமான ஜெர்மனியில், அந்த போரின் போது பயன்படுத்த வைத்திருந்த குண்டுகள் பல இடங்களில் புதையுண்டு கிடக்கின்றன. இவற்றை செயல் இழக்க செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்கிடையே ஸ்க்வாபிங்
மாவட்டத்தில் 250 கிலோ எடை கொண்ட குண்டு கண்டு பிடிக்கப்பட்டது.
இதை செயலிழக்க செய்யும் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்த குண்டு, முனிச் நகரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று முன்தினம் வெடிக்கச் செய்யப்பட்டது. இந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்வதற்கு முன்னதாக அந்த பகுதியில் இருந்த மூன்று ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். குண்டு வெடித்ததால் எழுந்த நெருப்பு கடந்த மூன்று நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக