திங்கள், ஆகஸ்ட் 27, 2012

ரெயில் தண்டவாளத்தில் குண்டு: சங்க்பரிவார்களை விசாரிக்காமல் தலித் அமைப்புகளை குறிவைக்கும் போலீஸ் !

kerala - Bomb on rail routeகோட்டயம்(கேரளா):கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வெல்லூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் டைம்பாம்ப் வைத்த குற்றவாளியை தப்பிக்க உதவிய சங்க்பரிவார பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சாவின் உள்ளூர் தலைவரை விசாரிக்காமல் தலித் அமைப்புகளை குறிவைத்து கேரள போலீஸ் விசாரணையை மேற்கொண்டுள்ளது. ரெயில்வே தண்டவாளத்தில் டைம்பாம் வைத்த வழக்கில் முதல் குற்றவாளியான
செந்தில்குமாருக்கு(வயது 37) உதவிய  சந்தோஷ் என்பவனை இதுவரை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பே சந்தோஷ் வெடிக்குண்டு தயாரிக்க தேவையான டெட்டனேட்டர்கள் மற்றும் அம்மோனியம் நைட்ரேட் ஆகியவற்றை சேகரித்து பாதுகாத்து வந்த தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் கூறுகிறது. செந்திலிடம் விசாரணை நடத்திய வேளையில் இந்த தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சில தலித் அமைப்புகளுக்கும், எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பிற்கும் இவ்வழக்கில் தொடர்பு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் கூறுகிறது. இதன் மூலம் தலித் அமைப்புகளுடனான சந்தோஷிற்கு இருந்த தொடர்பு குறித்து போலீஸ் முக்கியமாக விசாரித்து வருகிறது.
இதனிடையே, போலீஸ் பிடியில் சிக்காத சந்தோஷை, தப்பிக்க உதவிய சங்க்பரிவாரத்தின் அரசியல் கட்சியான பாரதீய ஜனதாவின் இளைஞர் பிரிவான யுவமோர்ச்சாவின் உள்ளூர் தலைவருக்கு வெடிக்குண்டு சம்பவத்தில் தொடர்பு குறித்து விசாரணை நடத்த போலீஸ் முயலவில்லை. சில ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளுடன் சந்தோஷிற்கு தொடர்பு இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செந்திலிடம் விசாரணை நடத்திய வேளையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சந்தோஷை கைது செய்ய அவருடைய ஊருக்கு போலீஸ் சென்றது. அப்பொழுது சந்தோஷின் வீட்டைக் காட்டிக்கொடுக்க போலீஸ் உடன் சென்ற யுவமோர்ச்சாவின் உள்ளூர் தலைவர், சந்தோஷின் வீட்டைக் காட்டிக் கொடுக்காமல் போலீஸாரை திசை திருப்பும் நோக்கில் அவருடைய மனைவியின் வீட்டிற்கு வழிகாட்டியுள்ளார். போலீஸ் அங்கு சென்றவேளையில், தனது வீட்டில் இருந்து சந்தோஷிற்கு, மொபைல் ஃபோன் மூலம் தகவல் கொடுத்து தப்பிக்க உதவியுள்ளார் யுவமோர்ச்சா தலைவர். இந்நிலையில் சந்தோஷை பிடிக்க போலீஸார் கேரளாவின் பல இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக