புதன், ஜனவரி 22, 2014

இந்திய அரசியலின் ‘குத்தாட்ட நாயகி’ ஆம் ஆத்மி கட்சி பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்


புதுடெல்லி,
டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக்கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு கொளுத்திய பிரச்சினையிலும், டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக  எழுந்த புகார் தொடர்பான பிரச்சனையிலும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மாநில அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த பிரச்சினையில் 4 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மியினர்  டெல்லில் தர்ணா போராட்டம் நடத்தினர். இவ்விவகாரம் தொடர்பாக தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த பிரபல் எழுத்தாளர் சேத்தன் பகத், ஆம் ஆத்மி இந்திய அரசியலின் 'குத்தாட்ட நாயகி' என்று கடுமையாக சாடியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்தை கண்டித்த சேத்தன் பக்த் இத்தகைய செயலால் அக்கட்சியின் ஆதரவாளரான தாம் வெட்கப்படுவதாக கூறியுள்ளார். "ஆம் ஆத்மி கட்சி எனது நம்பிக்கையை பொய்யாக்கிவிட்டது. போராட்டம், இதனால் கிடைத்த ஆதாயம் எதுவும் ஏற்புடையதாக இல்லை" என்றும் சேத்தன் பகத் கூறியுள்ளார்.
போராட்டதை அடுத்து இரண்டு போலீசாருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது தொடர்பாக பேசிய சேத்தன் பகத் “ இந்த தர்ணா போராட்டத்தால் தலைநகரே ஸ்தம்பித்தது. காவல் துறையினருக்கு பாதிப்பு ஏற்பட்டது மற்றும் பலரது உணர்வுகள் புண்பட்டது” என்று கூறியுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர்கள் (ஆம் ஆத்மி) தங்களை முன்னிறுத்தி கொள்ளும் அவசரத்தில் உள்ளனர். மக்களின் கவனம் முழுவதும் தங்கள் மீது உடனடியாகக் திருமப வேண்டும் என்பதால், குத்தாட்ட நடிகையைப் போல நடந்து கொள்கின்றனர். இந்தி திரையுலகில் நடிகை ஒருவருக்கு நடிக்க வாய்ப்புகள் சரியாக இல்லாதபோது, தன்னைப் பிரபலப்படுத்த குத்தாட்டப் பாடலில் நடிப்பார். தற்போது தங்களை பிரபல படுத்திக் கொள்ள இந்திய அரசியலின் குத்தாட்ட நாயகியாக ஆம் ஆத்மி கட்சி ஆகிவிட்டது என்று சேத்தன் பகத் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக