புதன், ஜனவரி 22, 2014

சோம்நாத் பார்திக்கு டெல்லி பெண்கள் ஆணையம் சம்மன்; குற்றம் கண்டுபிடிக்கப்பட்டல் நடவடிக்கை ஆம் ஆத்மி


புதுடெல்லி,
டெல்லி மாநில சட்டமந்திரி சோம்நாத் பார்தி டெல்லியில் வெளிநாட்டினர் அதிகமாக வாழும் பகுதியில் சோதனை மேற்கொண்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் உகாண்டா நாட்டு பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உகாண்டா நாட்டு பெண் புகார் கொடுத்துள்ளார்.  உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக புகார் கூறப்பட்டது. சோம்நாத் பார்திக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக சோம்நாத் பார்திக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் சோதனை என்ற பெயரில் எங்களிடம் மோசமாக நடந்து கொண்டது டெல்லி சட்ட மந்திரி சோம்நாத் பாரதிதான் என உகாண்டா பெண் குற்றம் சாட்டினார்.
ஜனவரி 15ம் தேதி எங்களிடம் மோசமாக நடந்து கொண்டது டெல்லி சட்ட மந்திரி சோம்நாத் பார்தி மற்றும் அவருடன் வந்தவர்களே என்று டெல்லி பெண்கள் ஆணையத்திடம் 5 உகாண்டா பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து புதுடெல்லி பெண்கள் ஆணையம் சட்ட மந்திரி சோம்நாத் பார்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது. சோம்நாத் பார்தியை பதவியில் இருந்து விலக கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக பெண்கள் ஆணையத்தின் தலைவி பார்கா சிங் “நாங்கள் அவரை நேற்றே ஆணையத்தின் முன் ஆஜராக கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர் ஆஜராக வில்லை. எனவே நாங்கள் மீண்டும் ஒரு சம்மனை அனுப்பியுள்ளோம். இனியும் அவர் ஆஜராக வில்லை என்றால் நாங்கள் கவர்னர் மற்றும் டெல்லி கமிஷ்னருக்கு கடிதம் எழுதுவோம்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் பார்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. பார்திக்கு எதிராக அரசியல் நடத்தப்படுகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி உறுதி அளிக்காது. ஆனால் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் அசுதோஷ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக