செவ்வாய், ஜூன் 03, 2014

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது.
இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது, கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒருலட்சதிற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் கோலாகலமாக தொடங்கியது.
அதன் ஒரு பகுதியாக மதுரையில் 31-05-2014 அன்று நெல்பேட்டை பேருந்து நிலையம் அருகில் கல்வி விழிப்புணர்வு பேரணி துவங்கி தெற்குவாசலில் பேரணி நிறைவுற்றது. இப்பேரணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட தலைவர் எம். ஏ. இத்ரீஸ் அவர்கள் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட கல்வி அதிகாரி உயர்திரு. கே. ஜெயமீனா தேவி அவர்கள் பேரணியை துவக்கி வைத்தார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட செயலாளர் அபுதாகிர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு கல்வி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும் சிறுவர், சிறுமிகள் மற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட செயலாளர் நாகூர் கனி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக