.jpg)
அரசியல்வாதிகளுக்கும், மூத்த அதிகாரிகளுக்கும் நில ஒதுக்கீடு செய்ததில் வீட்டு நிர்மாண கூட்டுறவு சங்கங்கள் பெரும் முறைகேடுகளை புரிந்துள்ளதை மகந்தேஷ் கண்டுபிடித்தார்.
இந்நிலையில் மகந்தேஷ் கடந்த 17-ம் தேதி சககார நகர் கூட்டுறவு சங்கத்தில் ஆவணங்களை சரிபார்த்து விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு வாகனத்தில் வந்த கும்பல் மகந்தேஷ் வந்த காரை வழிமறித்தது அவரைப் பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டுத் தப்பியது. இதில் பலத்த காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிட்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.
பெங்களூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள 80க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் அரசு கண்காணிப்பில் உள்ளன. ஊழலை கண்டுபிடித்த அரசு அதிகாரி தாக்கப்பட்டு பல தினங்கள் கழிந்த பிறகும் குற்றவாளிகளை பிடிக்க முடியாத கர்நாடகா மாநில பா.ஜ.க அரசின் காவல்துறையில் கையாலாகத்தனத்தால் மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். மகந்தேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் சதானந்த கவுடா வருகை தந்தபொழுது அங்கு கூடியிருந்த மக்கள் பா.ஜ.க அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக