ஞாயிறு, ஜூலை 17, 2011

ஈரானுடன் உள்ள வாய்ப்புகளை இழந்துவரும் இந்தியா...

ஜூலை17. மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, பாகிஸ்தான் மக்களுக்கு எதிரானது என்று நேற்று  தெஹ்ரானில் நடந்த சந்திப்பில் ஈரான் இஸ்லாமிய தலைவர் ஆயதுல்லா கொமைனி பாகிஸ்தான் பிரதமர் ஆசிப் அலி சர்தாரியிடம் கூறினார்,

பாகிஸ்தானின் எதிரிகளை முறியடிப்பதற்கு கடவுள் நிச்சயம் உதவி செய்வார் என்று நம்பிக்கை தெரிவித்தார், மத மற்றும் கலாசார ரீதியில் ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் நெடுங்கால தொடர்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்,

பாகிஸ்தான் பிரதமர், கொமைனியிடம் தெஹ்ரான் மற்றும் இஸ்லாமபாத்திற்குமிடையே உள்ள உறவை விரிவுபடுத்த வேண்டுமென அழைப்பு விடுத்தார்,

இதற்க்கு முந்தைய தினம் ஈரானின் பிரதமர் அஹ்மத் நிஜாதியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் பொருளாதாரம் மற்றும் எனெர்ஜி துறைகளை வலுப்படுத்த ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுகொண்டார்,

மேலும் இரு நாடுகளும் கரன்சிகளையும் வியாபார பரிவர்த்தனைகளில் அமெரிக்க டாலரைவிட அதிகமாக பயன்படுத்த வேண்டுமென்றும் அதன் மூலம் கடத்தல்களை குறைக்கவும் வியாபார உறவுகளை மேம்படுத்தலாம் கோரிக்கைவிடுத்தார்.

எது எப்படியோ ஈரானுடன் உள்ள பொன்னான வாய்ப்புகளை இந்தியா இழந்து வருகிறது அதை அண்டை நாடான பாகிஸ்தான் நன்றாக பயன்படுத்திகொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக