திங்கள், ஆகஸ்ட் 31, 2015

மலேசிய பிரதமருக்கு எதிராக இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள மலேசிய பிரதமருக்கு எதிராக போலீசின் தடையை மீறி அந்நாட்டு தலைநகரில் இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடைப்பெற்றது. 

சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நஜிப் ரஸாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பலநூறு மில்லியன் டாலர் பணம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து எதிர்கட்சிகள் அவரை பதவி விலகும்படி கூறிவருகிறார்கள். ஆனால் அவர் தனது வங்கிக் கணக்கில் இருப்பது நன்கொடைப் பணம் என்றும் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறிவருகிறார். 

ஆனால் அவரரை பதவி விலகும்படி வற்புறுத்தி கோலாலம்பூரில் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி, கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்களை சட்டவிரோதமானது என்று காவல்துறை அறிவித்திருந்தது, எனினும், போராட்டங்களை அடக்குவதற்கான நடவடிக்கையில் காவல்துறை இறங்கவில்லை. போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு மஞ்சள் நிற உடை அணிந்து மக்கள் போராடினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக