வியாழன், ஆகஸ்ட் 27, 2015

வன்முறையில் ஈடுபடும் குஜராத் காவல்துறை: சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் வெளியிடப்பட்டதால் பரபரப்பு

குஜராத் மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டம் வன்முறையாகவும், சாதி கலவரமாகவும் மாறியதில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. தங்களை ஓ.பி.சி. பிரிவில் சேர்த்து அதிக இடஒதுக்கீடு தரவேண்டும் என ஹார்தீக் படேல் என்ற 21 வயது இளைஞரின் தலைமையின் கீழ் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த போராட்டம் பயங்கர வன்முறையாக மாறியது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, காவல்துறையினரும், ராணுவமும் குவிக்கப்பட்டு உள்ளார்கள். இந்த போராட்டம் பற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹார்தீக் படேல், காலல்துறையினரும் வன்முறையில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டியிருந்தார். 

தற்போது அவரது குற்றசாட்டை உண்மையாக்கும் விதமாக, 25-ம் தேதி இரவு, குஜராத் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடும் காட்சிகளின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கேமரா பதிவில், அகமதாபாத்தில் அமைந்துள்ள ஷாகிபாக் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் காவல்துறையினர், அங்குள்ள குடியிருப்பு பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கார் கண்ணாடிகளை உடைப்பதும், பெரிய கற்களை கொண்டு தாக்குவதும் பதிவாகியுள்ளது. 

காவல்துறையினரின் அத்துமீறல் பற்றி விசாரணை நடத்த குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக