காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே ’இந்து பயங்கரவாதம்' தொடர்பான மோதல் அதிகரித்து வருகிறது. ராஜ்நாத் சிங் ’இந்து பயங்கரவாதம்' என்பதன் அர்த்தத்தை மாற்றிக் கூறுகிறார் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசில், சுஷில் குமார் ஷிண்டே உள்துறை மந்திரியாக இருந்தபோது, "இந்து பயங்கரவாதம்' என்ற சொல்லை அவர் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தினாரோ, அதனை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் திரித்து மாற்றி கூறுகிறார் என்று தமிழகத்தை சேர்ந்த் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது,
’சுஷில் குமார் ஷிண்டே உள்துறை அமைச்சராக இருந்தபோது, "மலேகான், மெக்கா மசூதி உள்ளிட்ட சில இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகளுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது என்று தான் கூறினார். ஆனால் அதனை ராஜ்நாத் சிங் அதை தற்போது திரித்துக் கூறியுள்ளார். அதாவது, காங்கிரஸ் அரசு "இந்து பயங்கரவாதம்' என்ற சொல்லைப் பயன்படுத்தியதன் மூலம், பயங்கரவாதத்துக்கு எதிரான நமது நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இதே கருத்தை சுஷில் குமார் ஷிண்டே மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக