புதன், ஜூலை 25, 2012

சட்டத்தை சகட்டுமேனிக்கு மிதிக்கும் மதுரை ஆதீனம், நித்தியானந்தா... கோர்ட்டுக்கு வராமல் முரண்டு . . .

 Madurai Court Orders Aadheenam Nithyanantha Reply மதுரை: மதுரை கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியும் வராமல் முரண்டு பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள் மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும். இருவர் மீதும் தொடரப்பட்ட வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு மறுபடியும் அவர்களுக்கு மதுரை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த வக்கீல் மணிவாசகம் மாவட்ட முதன்மை கூடுதல் நீதிமன்றத்தில் ஒரு
மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதில்,
மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டு உள்ள நித்யானந்தா பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். இவரது நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
அதை விசாரித்த நீதிபதி, இரு சாமியார்களுக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் சம்மனை வாங்கவில்லை. வாங்கிய மதுரை ஆதீனம் கோர்ட்டுக்கு வரவில்லை. கேட்டால், அதெல்லாம் நாங்கள் வரமாட்டோம் என்று திமிராகப் பேசியிருந்தார்.
இந்த நித்தியானந்தா, சம்மனை வாங்கவே மறுத்து விட்டார். இதையடுத்து நாளிதழ்களில்அதை விளம்பரமாக போடுங்கள் என்று நீதிபதி உத்தரவிட்டார். இன்றைக்கு வழக்குத் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இன்று நீதிமன்றத்தில் வழக்கு நீதிபதி ராஜசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
ஒருவேளை இருவரும் தொடர்ந்து கோர்ட்டுக்கு வர மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக