வியாழன், ஜூலை 19, 2012

சவால் விடும் " மரண சாலை ". பொலிவியா நாட்டில் உள்ள இந்த சாலையை விட நம்மநாடு எவ்வளவோ மேல்.(படங்கள் இணைப்பு)

ஒரு நாட்டின் போக்குவரத்திற்கும், வாணிபத்திற்கும் மூலதனமாக விளங்குவது சாலைகள் தான். இன்று பல வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் சிறந்த சாலைகளை அமைக்கின்றன. ஆனால் எவ்வளவு தான் நவீன தொழில்நுட்பங்கள் வந்தாலும் சரிபடுத்தமுடியாத சாலைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் முதலில் குறிப்பிட வேண்டியது தென் அமெரிக்காவின் " யுன்காஸ் " ( Yungas Road ).
சாலைதான் இது தான் உலகின் மிக ஆபத்தான சாலை.
பொலிவியாவில் உள்ள கோரைக்கோ என்ற பகுதிக்கும் யுன்காஸ் பகுதிக்கும் இடையே உள்ள ஒரே வழிப் போக்குவரத்து இது தான். இந்த சாலையின் மொத்த நீளம் 43 மைல்கள். பராகுவே நாட்டில் உள்ள சிறைக் கைதிகளைக் கொண்டு 1930 இல் இந்த சாலை அமைக்கப்பட்டது. அமைக்கப்படும் போதே நூற்றுக்கணக்கானோரை  பலி வாங்கியது. இதன் அகலமோ மிகக்குறைவு. சாலையின் முதல் 5 மைல் நீளம் உயரமாக ஏறும், திடீரென்று 1079 அடி கீழே இறங்கும்.
இது போதாதென்று பாதை முழுவதும் சேரும், சகதியும், மேடும், பள்ளமுமாக இருக்கும். இடையிடையே மலையிலிருந்து பாறைகள் உருண்டு வரும். தண்ணீர் அருவி போல கொட்டும் இப்படி பல சவால்கள். மேலும் அதிர்ச்சியளிக்ககூடிய சில விஷயங்கள் உள்ளன. அவை  என்னவென்றால் இந்த சாலை ஒரு ஒருவழிப் பாதை. தவிர சாலையின் விளிம்பில் பாதுகாப்புக்காக தடுப்புகளோ, சுவர்களோ, மரங்களோ, கிடையாது. அவற்றை அமைக்கவும் இடம் கிடையாது. நூலிலையில் தவறினாலும் நேரே சொர்க்கம் செல்ல வேண்டியது தான்.
ஒவ்வொரு வருடமும் சராசரியாக 300 பேர்களை இந்த சாலை பலி வாங்குகிறது. குறைந்தபட்சம் வாரத்திற்கு 1 வாகனமாவது மலையிலிருந்து கீழே விழுகிறது. 1983 ஆம் ஆண்டு இந்த சாலையில் பயணம் செய்த பேருந்து கீழே விழுந்தது. அதில் பயணம் செய்த 100 பேர் பலியானார்கள். இவ்வாறு மிக மிக ஆபத்துக்கள் நிறைந்திருப்பதால் இந்த சாலை  " மரண சாலை " என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த சாலையோடு ஒப்பிடும்போது மழை பெய்தவுடன் " பல்லைக் " காட்டும் நம்ம ஊர் சாலைகள் எவ்வளவோ பரவாயில்லை என்று பெருமூச்சு விடதோன்றுகிறதோ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக