மீனவர்கள் தவிர தமிழக மீனவர்களின் 5 படகுகளையும் இலங்கையர்கள் பிடித்துச் சென்றுள்ளனர். இன்று அவர்களை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனராம்.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத் தலைவர் எமிரெட் கூறுகையில், தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 20 படகுகளை இலங்கைக் கடற்படையினர் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். மீன்பிடி வலைகளையும் கிழித்தெறிந்து விட்டனர் என்றார் குமுறலுடன்.
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கைக் கடற்படையும், அந்த நாட்டு மீனவர்களும் கூட்டாக சேர்ந்து நடத்திய இந்த அக்கிரமச் செயலால் ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காலவரையற்ற ஸ்டிரைக்
பிடித்துச் செல்லப்பட்ட 23 மீனவர்களையும் விடுவிக்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் ராமேஸ்வரத்தி்ல் பதட்டம் நிலவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக