செவ்வாய், ஜூலை 31, 2012

மோடிக்கு ராம்தேவ் நற்சான்றிதழ் !

Ramdev gives clean chit to Modiஅஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடிக்கு ஹைடெக் ஆன்மீக ஊழல் பேர்வழியான பாபா ராம்தேவ் நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். ஊழல் விவகாரத்தில் மோடி தவறிழைக்கவில்லை என்பது ராம்தேவின் கூற்று. மோடியுடன் இணைந்து விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு ராம்தேவ் கூறியதாவது: ‘எல்லோரும்
என்னிடம் குஜராத்தில் ஊழல் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், நான் அங்கே எதுவும் காணவில்லை. மோடி தவறு எதுவும் செய்யவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு அரசில் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். மோடி தவறு ஏதேனும் புரிந்திருந்தால் அவரும் சிறைக்கு சென்றிருப்பார்’ என ராம்தேவ் கூறினார்.
ராம்தேவ் மோடியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றது ஹஸாரே குழுவினரை அதிருப்தி அடையச்செய்துள்ளது. மோடி மனிதநேயத்திற்கு எதிரானவர். அத்தகைய ஒரு நபருடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து ராம்தேவ் விளக்கமளிக்க வேண்டும் என ஹஸாரே குழுவைச் சார்ந்த சஞ்சய் சிங் டெல்லியில் தெரிவித்தார்.
ராம்தேவ் ஏற்கனவே சங்க்பரிவாரின் கைத்தடி என்பது ஹஸாரே குழுவினருக்கு தெரியாதா என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக