வெள்ளி, ஜூலை 20, 2012

கிரிக்கெட் வீரர் மார்க் பவுச்சர் 'ஆப்ரேஷன்' வெற்றி-பார்வை திரும்ப கிடைக்கும்: டாக்டர்கள் நம்பிக்கை !

Boucher Undergoes Eye Surgery No கேப்டவுன்: முன்னாள் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரின் இடது கண்ணில் ஏற்பட்ட காயத்திற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இதன் மூலம் அவருக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.முன்னாள் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர்(35). இந்த மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் தென்
ஆப்பிரிக்கா அணியில் இவர் இடம் பெற்றிருந்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, கடந்த 9ம் தேதி கவுண்டி அணியான சேமர்சேட் அணிக்கு எதிராக 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா கலந்து கொண்டது. இப்போட்டியின் போது தென் ஆப்பிரிக்க சுழல்பந்துவீச்சாளர் இப்ராம் தகிர் வீசிய பந்து ஸ்டம்பில் பட்டு போல்டானது. அப்போது ஸ்டம்பின் மீது இருந்த 'பைல்ஸ்' எதிர்பாராதவிதமாக விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சரின் இடது கண்ணை பதம் பார்த்தது.
இதனால் மார்க் பவுச்சரின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் கடும் ரத்த போக்கு ஏற்பட்டால், பவுச்சருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பவுச்சரின் இடது கண் பார்வையை இழக்கலாம் என்ற அச்சம் நிலவியது.
மார்க் பவுச்சரின் கண்ணில் ஏற்பட்டுள்ள காயத்திற்காக, 3 மணி நேர அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு நாடு திரும்பிய, பவுச்சருக்கு நேற்று 2வது முறையாக கேப்டவுனில் கண் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு மார்க் பவுச்சரின் இடது கண் மூலம் மீண்டும் பார்வை கிடைக்கலாம் என்று டாக்டர்கள் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து டாக்டர்கள் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மார்க் பவுச்சரின் கண் அறுவை சிகிச்சை 3 மணிநேரம் நடைபெற்றது. அறுவை சிகிச்சையின் போது, எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. எதிர்பார்த்தது போல ரத்த போக்கு அதிகளவில் ஏற்படவில்லை. பவுச்சரின் இடது கண்ணில் இருந்த ரெடினா பாதிக்கப்படாத வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது.
எனவே அவரது இடது கண்ணிற்கு மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்புள்ளது. கண்ணில் காயம் ஏற்பட்டதால் கட்டியிருந்த ரத்தம் நீ்க்கப்பட்டது. வெளிபுறமாக கண்ணில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக