வியாழன், ஜூலை 26, 2012

ஹிஷாம் கன்தீல் எகிப்தின் புதிய பிரதமர் !

Hesham Qandil as Egypt's new PMகெய்ரோ:ராணுவ அரசு நியமித்த இடைக்கால அரசில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி வகித்த ஹிஷாம் கன்தீலிடம் புதிய அரசை உருவாக்க எகிப்து அதிபர் முஹம்மது முர்ஷி உத்தரவிட்டுள்ளார்.பிரதமர் பதவிக்கு கன்தீலை தேர்வுச்செய்த பிறகு அவரிடம் அமைச்சரவையை உருவாக்க முர்ஸி உத்தரவிட்டார். எகிப்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது முர்ஸி 25 தினங்களை பூர்த்திச்
செய்துள்ளார். பிரதமர் பதவிக்கு முர்ஸி, பொதுமக்கள் விரும்பும் ஒருவரை தேர்வுச் செய்யப் போவதாகஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தார். நீண்ட ஆலோசனைகள், சர்ச்சைகளுக்கு பிறகே கன்தீலை பிரதமர் பதவிக்கு தேர்வுச் செய்ததாகவும், எகிப்தின் தற்போதைய சூழல்களை கையாள அவரால் இயலும் என நம்புவதாகவும் முர்ஸி தெரிவித்தார்.
பிரதமர் என்ற நிலையில் எவ்வளவு அதிகாரங்கள் அவரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படவில்லை. அரசியல் சாசனம் இல்லாத காரணத்தால் முக்கிய அதிகாரங்களில் ராணுவ தலைமையின் பிடி இறுகும் என கருதப்படுகிறது.
48 வயதான கன்தீல் அமெரிக்காவில் படித்தவர். குறைந்த காலத்திலேயே ஆட்சி நிர்வாகத்தில் சிறப்புற்று விளங்கியதுதான் கன்தீலை முர்ஸி பிரதமராக நியமிக்க காரணம் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக