வெள்ளி, ஜூலை 27, 2012

யெமன் மக்கள் தொகையில் 4 இல் ஒருவர் பட்டினியால் வாடும் அவலம் !

Yemen now faces a lack of foodஸன்ஆ:அரசியல் சமூக ஸ்திரத்தன்மையற்ற நிலை நீடிக்கும் யெமனில் 25 சதவீத மக்களும் பட்டினியால் வாடுவதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. அரசியல் பிரிவினர் இடையேயான மோதல்களும், பொது வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் காரணமாக துயரும் யெமன் மக்களுக்கு பட்டினியும் பெரும் சுமையாக
மாறியுள்ளது.
அரசியல், சமூக துறையுடன் விவசாய துறையும் யெமனில் தகர்ந்து போயுள்ளது. இதனால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுபோலவே அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் நாட்டின் பொருளாதார வளங்களை ஒருசிறு கூட்டம் அனுபவித்து வருகிறது. ஆகையால் ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களை பாதுகாக்க அரசோ அல்லது இதர அதிகாரப்பூர்வ அமைப்புகளோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் நாட்டு மக்களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக