வியாழன், ஜூலை 26, 2012

பிரிட்டன் முதல் ரோம் வரை பாஸ்போர்ட் இல்லாமல், விசாரணையும் இல்லாமல், விமானத்தில் பயணித்த சிறுவன் !

The 11-year-old boy took a Jet2.com flight to Rome from Manchester பிரிட்டனில் காணாமல் போன சிறுவன், பாஸ்போர்ட் இல்லாமல் ரோம் நகருக்கு விமானத்தில் சென்ற போது மீட்கப்பட்டான். பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவன் லியாம் கார்கோரன்,11. நேற்று முன்தினம் தனது தாயுடன் கடைக்கு வந்துள்ளான். பொருட்களை வாங்குவதில் தாய் மும்முரமாக இருந்தபோது, பக்கத்தில் இருந்த மான்செஸ்டர்
விமான நிலையத்துக்குள் விளையாட்டாக நுழைந்துள்ளான். விமானம் புறப்படும் பகுதிக்குச் சென்ற லியாம், அங்கு வரிசையில் நின்றிருந்தவர்களுடன் சென்று, ரோம் நகருக்கு புறப்பட்ட ஜெட்2.காம் விமானத்தில் ஏறிக்கொண்டான்.
விமானம் ரோம் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விமான ஊழியர், விமான பயணிகளை கணக்கெடுத்த போது, இந்த சிறுவன் பெயர் பட்டியலில் இல்லாதது கண்டு திடுக்கிட்டார். உடனடியாக பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, "சிறுவன் எங்களுடன் வரவில்லை' என்றனர். உடனடியாக, மான்செஸ்டர் விமான நிலையத்துக்கு தொடர்பு கொண்டு விசாரித்த போது, ஒரு தாய் தனது மகனை காணாமல் தேடிக்கொண்டிருப்பது தெரியவந்தது.
 
இதையடுத்து, ரோம் நகரில் அனைத்து பயணிகளும் இறங்கிய பின், சிறுவனை அதே விமானத்தில் மீண்டும் மான்செஸ்டர் விமான நிலையத்துக்கு விமான ஊழியர்கள் அழைத்து வந்தனர். பின், சிறுவனின் தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர், மகனை அழைத்துச் சென்றார்.

இருப்பினும் பல சோதனை இடங்களை தாண்டி, எப்படி சிறுவன் பாஸ்போர்ட் இல்லாமல், ஒரு விசாரணையும் இல்லாமல், விமானத்தில் பயணித்தான். அதுவரை அங்குள்ள அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பது குறித்து, விசாரணை நடக்கிறது. சிறுவன் விமானத்தில் ஏறி உட்கார்ந்து பயணிக்கும் வரை, அஜாக்கிரதையாக செயல்பட்ட ஜெட்2.காம் விமான ஊழியர்கள் ஐந்து பேர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக