செவ்வாய், ஜூலை 31, 2012

ஹோம்ஸ்டே ரிசார்ட் தாக்குதல்:8 பேர் கைது !

Eight arrested over Mangalore homestay attackமங்களூர்:கலாச்சாரத்தை பாதுகாக்கும் பேர்வழிகளாக காட்டிக்கொண்டு மங்களூர் ஹோம் ஸ்டே ரிசார்டில் மாணவிகளை தாக்கிய வழக்கில் எட்டு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயல்கள் நடப்பதாக குற்றம் சாட்டி ஹிந்து ஜாக்ரண் வேதிகா என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை இரவு ஹோம் ஸ்டே ரிசார்டில்
தாக்குதலை நடத்தினர். இச்சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மங்களூர் நகரத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்பாக எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து பெங்களூரில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதல்வர் ஜகதீஷ் ஷெட்டார், உள்துறை அமைச்சர் ஆர்.அசோகாவுடன் நிலைமைகள் குறித்து விவாதித்தார். இப்பிரச்சனையை அரசு பாரதூரமானதாக கருதுவதாக ஷெட்டார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் நடந்ததாகவும், இத்தகைய சம்பவங்களை பொறுத்துக்கொள்ள இயலாது என்று உள்துறை அமைச்சர் ஆர்.அசோகா தெரிவித்துள்ளார்.
கூடுதல் டி.ஜி.பி கோபால்கிருஷ்ணா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். கைது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்ததிட்டமிட்டிருப்பதால் மங்களூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் தொலைக்காட்சி சானல்கள் வெளியிட்டுள்ள தாக்குதல் தொடர்பான காட்சிகளை போலீஸ் பரிசோதித்து வருகிறது. மேலும் பலர் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது.
பிறந்த தின கொண்டாட்டத்திற்கு மங்களூர் புறநகர் பகுதியான படில் அமைந்துள்ள ஹோம் ஸ்டே ரிசார்டில் மாணவிகள் உள்பட 13க்கும் மேற்பட்ட மாணவிகள் இரவில் கூடினர். இங்கு அத்துமீறி நுழைந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மாணவிகளை கொடூரமாக தாக்கினர். பாதுகாக்க முயன்ற போலீசாரை அப்பகுதி மக்கள் தடுத்தனர். தொடர்ந்து போலீஸ் தடியடி நடத்தியது. குளிர்பானங்கள், பீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் ஆகியவற்றை போலீசார் அங்கிருந்து கைப்பற்றினர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த இரண்டு பத்திரிகையாளர்கள் குறித்து போலீசார் விசாரணைச் செய்து வருகின்றனர். பெண்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்காமல் காட்சிகளை பதிவுச்செய்த செய்தியாளர்களின் நடவடிக்கை குறித்து பெண்கள் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.
கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகளை விடுதலைச் செய்யக்கோரி கமிஷனர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்திய ஹிந்து ஜாக்ரண் வேதிகா இயக்கத்தைச் சார்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
கலாச்சாரத்தை காப்பாற்ற(?) தாங்கள் ஹோம்ஸ்டே ரிசார்டில் தாக்குதல் நடத்தியதாக போராட்டத்தில் கலந்துகொண்டோர் கூறினர். லைசன்ஸ் இல்லாமல் ஹோம்ஸ்டே நடந்து வந்ததாக மங்களூர் போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் கூறியுள்ளார்.
2009-ஆம் ஆண்டு ஸ்ரீராம சேனா ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கலாச்சாரத்தின் காவலர்களாக(?) மாறி பப்புகள் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதன் பிறகு இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், தாக்குதல் குறித்து சி.ஐ.டி விசாரணை நடத்தவேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வரா கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக