திங்கள், ஜூலை 23, 2012

ஜப்பான் அருகே அமெரிக்கா போர் விமானம் கடலில் விழுந்தது . . .

ஜப்பான் அருகே அமெரிக்கா போர் விமானம் கடலில் விழுந்ததுஅமெரிக்காவின் அமோரி விமானப்படை தளத்தில் இருந்து எப்-16 ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நேற்று காலை 7.30 மணி அளவில் ஜப்பான் நாட்டின் அருகேயுள்ள பசிபிக் கடலில் விழுந்தது.இந்த தகவலை ஜப்பான் நாட்டின் விமானப்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்த போர் விமானத்தை ஒரே ஒரு விமானிதான் ஓட்டிச் சென்றார். அவர் கதி என்ன? என்று தெரியவில்லை. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், விமானியை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக