மீண்டும் பணியில் அமர்த்தும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டது.இதனையடுத்து, மனுவை விசாரித்த நீதிபதிகள் 'ஒவ்வொரு முறையும் உதைத்து விளையாட மக்கள் நலபணியாளர்கள் கால்பந்து அல்ல' என்று கூறி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. முன்னதாக, தமிழகம் முழுவதும் சுமார் 13,500 பேர், கடந்த ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில், தமிழக அரசு திடீரென ஒரே உத்தரவில் அவர்களை சமீபத்தில் பணி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுகுணா, 'மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்து, வரும் 21ம் தேதி அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப' உத்தரவிட்டார். இந்த தடை உத்தரவின்படி மக்கள் நல பணியாளர்களுக்கு பணி வழங்கவேண்டும். மக்கள் நல பணியாளர்கள் பட்டியலை மனுதாரர்களின் வக்கீல்கள் உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்துள்ளனர். உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட பட்டியலில் பெயர் உள்ளவர்கள் அனைவருக்கும் மீண்டும் அரசு பணி வழங்க வேண்டும். அதன்படி அரசு எத்தனை பேருக்கு பணி கொடுத்தது என்ற விவரம் பற்றி அறிக்கையை இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து, தீர்ப்பை எதிர்த்து நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பு அளித்தனர்.
புதன், நவம்பர் 23, 2011
உதைத்து விளையாட மக்கள் நலபணியாளர்கள் கால்பந்து அல்ல' : தமிழக அரசின் மனு தள்ளுபடி

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக