இடைத் தேர்தலில் ரெட்டி சகோதரர்களின் ஆதரவுடன் சுயேட்சையாக களம் இறங்குகிறார் ஸ்ரீராமுலு.
பாஜக சார்பில் காதிலிங்கப்பாவும், காங்கிரஸ் சார்பில் ராம பிரசாத்தும் போட்டியிடுகின்றனர். ஸ்ரீ ராமுலுவை தோற்கடித்து வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாஜக. பெல்லாரி தங்களின் கோட்டை என்பதை உணர்த்த ஸ்ரீராமுலுவை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ரெட்டி சகோதரர்கள். இதன் காரணமாக ஸ்ரீ ராமுலு சார்பாக மக்களுக்கு இங்கு தாராளமாக பணம் வழங்கப் படுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
கடந்த முறை சுமார் 25700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்ரீ ராமுலு இம்முறை வெற்றி பெற்று பாஜகவுக்கு செக் வைப்பாரா அல்லது ரெட்டி சகோதரர்களின் கோட்டையை தகர்த்து எறிந்து காங்கிரஸ் வேட்பாளர் இங்கு வெற்றி பெறுவாரா என்பது டிசம்பர் 3 அன்று தெரிந்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக