முன்பு இறைத்தூதரையும், முஸ்லிம்களையும் விமர்சித்து முஸ்லிம்களின் கண்டனத்திற்கு ஆளான அயான் ஹிர்ஸி அலி என்ற சோமாலியா நாட்டு வலதுசாரி ஆதரவு எழுத்தாளர் பெண் தான் இந்த கட்டுரையை எழுதியுள்ளார். கட்டுரையின் உள்ளடக்கம் குறித்து சோசியல் நெட்வர்க்குகளில் தீவிரமான விவாதங்கள் நடந்து வருகின்றன.
முஸ்லிம்களை மீண்டும் கொந்தளிக்க வைத்து தண்டனையை தாமாகவே முன்வந்து கெஞ்சி வாங்க அமெரிக்கர்களுக்கு அவ்வளவு நிர்பந்தமா? என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
யார் இந்த அயான் ஹிர்ஸி அலி?
1992-ல் நெதர்லாந்தில் தஞ்சம் அடைவதற்காக ஹிர்ஸி அலி சமர்ப்பித்த விண்ணப்பத்தில் அவர் பொய்யான பெயர் மற்றும் தகவல்களை தந்திருந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து அவரது குடியுரிமை பறிக்கப்படலாம் என நெதர்லாந்தின் குடியுரிமை அமைச்சர் மறைமுகமாக தெரிவித்தார். தனது குட்டு வெளிப்பட்டதால் வேறு வழியில்லாமல் ஹிர்ஸி அலி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
தான் பொய் சொன்னதை ஒப்புக் கொண்ட ஹிர்ஸி அலி, தான் நெதர்லாந்தில் இருப்பதை தன் குடும்பத்தினர் கண்டுபிடித்து விடுவார்களோ என தாம் பயந்ததாலேயே அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் இவருக்கு அமெரிக்கா அடைக்கலம் அளித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக