79 வயதான சவூதி இளவரசர் நாயிஃப் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் அந்நாட்டின் உள்துறை அமைச்சராக நீண்டகாலம் பணியாற்றியவர். மருத்துவ சிகிட்சைக்காக அல்ஜீரியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணித்த நாயிஃப், அமெரிக்காவிற்கு இந்த ஆண்டு சிகிட்சைக்காக சென்றார். கடந்த ஜூன் 16-ஆம் தேதி அமெரிக்காவில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது.
உமர் சுலைமான், எகிப்து முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சி காலத்தில் உளவுத்துறை தலைவராக பணியாற்றியவர். மக்கள் புரட்சி எகிப்தில் உருவானபொழுது முபாரக், சுலைமானை எகிப்தின் துணை அதிபராக நியமித்தார். இவர் அண்மையில் அமெரிக்காவிற்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்ற வேளையில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஃபரீத் ஸக்கரியாவின் இக்கூற்று பல கேள்விகளை எழுப்புகிறது.
இந்த அறிக்கையை வெளியிடுவதால் ஏற்படும் விளைவுகளை புரிந்துகொண்டுதான் ஃபரீத் ஸக்கரியா இத்தகவலை அரபு தொலைக்காட்சி சானலில் வெளியிட்டாரா?
உமர் சுலைமான் ஏன் ஃபரீத் ஸக்கரியாவை அழைத்து இத்தகவலை கூறவேண்டும்? ஃபரீத் ஸக்கரியாவுக்கும் உமர் சுலைமானுக்கும் என்ன உறவு?
சி.ஐ.ஏ மற்றும் இஸ்ரேலுக்கு பல தசாப்தங்கள் நேசத்திற்குரியவராக திகழ்ந்த உமர் சுலைமானை ஏன் சி.ஐ.ஏ கொலைச் செய்யவேண்டும்?
சி.என்.என்னில் பணியாற்றும் ஃபரீத் ஸக்கரியா, இந்த குற்றச்சாட்டை தற்பொழுது கூற என்ன காரணம்? (ஏற்கனவே இவர் வேறொரு எழுத்தாளரின் ஆக்கத்தை காப்பியடித்தார் என அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டார்.)
ஃபரீத் ஸக்கரியா ஏன் இத்தகவலை ஒரு அரபிக் சானலில் வெளியிட வேண்டும்? சி.என்.என் போன்ற ஆங்கில சானல்களில் வெளியிட்டிருக்கலாமே?
எது எப்படியோ, ஃபரீத் ஸக்கரியா கூறியதற்கு அமெரிக்க தரப்பில் இருந்து பதில் வராது என்பது நிச்சயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக