இந்நிலையில் புது டெல்லியில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய பின் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: “அரசியல் கட்சி தொடங்க வேண்டுமெனக் கூறி வரும் குழுவினரிடமிருந்து பிரிந்து செல்வது என ஹசாரே எடுத்துள்ள முடிவு அதிர்ச்சி அளிக்கிறது; நம்ப முடியாதது; துரதிருஷ்டவசமானது; இது வேதனையளிக்கும் முடிவு.
அவர் எனது குரு. என் தந்தைக்கு சமமானவர். ஹஸாரேயின் படம் எங்கள் இதயத்தில் பதிந்துள்ளது. அவருடைய ஆசி எப்போதுமே எங்களுக்குக் கிடைக்க வேண்டும். அவருடைய கொள்கைகள்தான் எங்கள் கட்சியின் அடித்தளமாக இருக்கும்” என்றார்.
ஹசாரே குழுவில் முக்கிய பங்கு வகிப்பவருள் ஒருவரான முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி கூறியது:
“அரசியல் கட்சி தொடங்குவதற்கு என்ன அவசியம் வந்துவிட்டது? நாடு முழுவதும் எல்லா இயக்கங்களையும் ஒற்றுமைப்படுத்தி, வலிமையான ஜனலோக்பால் சட்டம், ஊழல் எதிர்ப்பு ஆகிய விஷயங்களில் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி தர முடியும்” என கிரண் பேடி கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக