வியாழன், ஜனவரி 29, 2015

மிச்செல் தலையை மறைக்கும் துணி அணியாததால் சர்ச்சை; கை குலுக்குவதை தவிர்த்த அதிகாரிகள்

சவுதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் தலையை மறைக்கும் துணியை அணியாததால் சர்ச்சை வெடித்துள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக கடந்த 25–ந் தேதி இந்தியா வந்தார். குடியரசு தின அணிவகுப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 3 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா, மனைவி மிச்செல்லுடன், சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் இறுதி சடங்கில் பங்கேற்க சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, சவுதி அரபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளை தவிர்த்துக் கொண்டார். மிச்செல் தலையை மறைக்கும் துணி அணியாததால் சர்ச்சை ஏற்படுத்தியது. 
சவுதி அரேபியாவில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து மிச்செல் ஒபாமா இறங்கியதும், எப்போதும் அணியும் மேற்கத்திய ஆடையில் இல்லாமல், நீண்ட பேன்ட் மற்றும் பளீர்நிறத்திலான ஆடையுடன் மேல்அங்கி போன்றவையையும் அணிந்திருந்தார். மிச்செல் சவுதி அரேபியா சட்டத்தின்படி தலையை மறைக்கும் துணியை மட்டும் அணியவில்லை. விமானத்தில் இறங்கிய ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல்லை வரவேற்க அந்நாட்டு அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்கள் ஒபாமாவை கை குலுக்கி வரவேற்றனர். மிச்செல்லையும் சிலர் கை குலுக்கி வரவேற்றனர். ஆனால் பலர் அவரை கை குலுக்கி வரவேற்பதை தவிர்த்தனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக