வியாழன், ஜனவரி 15, 2015

டெல்லி பாரதீய ஜனதா தலைவருக்கு எதிரான சான்றுகளை இன்று வெளியிடுவோம்: கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சதீஷ் உபாத்யாயாவுக்கு எதிராக புதிதாக இன்று சான்றுகளை வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.

கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

முன்னாள் முதல் மந்திரியான கெஜ்ரிவால், உபாத்யாய் மற்றும் சில மின் விநியோக நிறுவனங்களுக்கு இடையே தொடர்பு உள்ளது என்றும், அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் தேசிய தலைநகர் டெல்லியில் மீட்டர்களை பொருத்துதல் மற்றும் சரி செய்தல் தொடர்பான பணிகளை டிஸ்காம் என்ற நிறுவனத்திற்கு செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.


இதற்கு உபாத்யாய், இதனை நிரூபிக்க கெஜ்ரிவால் தவறினால், நஷ்ட ஈடு வழக்கு ஒன்றை தொடர்வேன்.  கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், அரசியலை விட்டு நான் விலகுவேன் என்றும் பதிலளித்திருந்தார்.

கெஜ்ரிவால் கேள்வி

இந்நிலையில், டெல்லி பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அரசியலை விட்டு விலகுவேன் என்ற தனது வாக்கினை காப்பாற்றுவாரா? என ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார் கெஜ்ரிவால்.  நாங்கள் சான்றுகளை சமர்ப்பித்தால் அரசியலை விட்டு விலகி விடுவதாக சதீஷ் உபாத்யாய் கூறியுள்ளார்.

சான்றை வெளியிடுவோம்

நாங்கள் அதற்கான சான்றை இன்று வெளியிடுவோம்.  அவர் தனது வாக்கை காப்பாற்றுவார் என நாங்கள் நம்புகிறோம் என டுவிட்டர் செய்தியில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  மின் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ள இவரை பாரதீய ஜனதா கட்சிக்கு டெல்லி தலைவராக தேர்வு செய்தது எவ்வாறு என்று கெஜ்ரிவால் கேட்டுள்ளார்.  உபாத்யாய் 6 நிறுவனங்களை சொந்தமாக வைத்திருப்பதாகவும் அவற்றில் சட்டத்திற்கு மாறாக ஒரு நிறுவனம் இரண்டு வாட் எண்களை வைத்திப்பதாகவும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக