புதன், ஜனவரி 28, 2015

ராணுவ அணிவகுப்பை பார்வையிட புதினுக்கு சீனா அழைப்பு

இரண்டாவது உலகப்போரில் வெற்றி பெற்றதின்  70-வது ஆண்டு நினைவாக சீனா  அந்நாட்டு தலைநகர் பெய்ஜிங்கில் மாபெரும் ராணுவ அணிவகுப்பை  திட்டமிட்டுள்ளது.அதேபோல், இந்த நிகழ்ச்சியை பார்வையிட ரஷ்ய அதிபர் புதினுக்கும் அழைப்பு விடுக்கபடும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு  சீனாவில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சீனாவின் பொது பாதுகாப்புக் கழகத்தின் தலைமை அதிகாரி ஃபூ சென்குவா சீன இணையதள  ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

இந்தப் போர்நினைவு நிகழ்ச்சிக்கு ரஷ்ய நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டு ராணுவ அணிவகுப்பை பார்வையிடுவதை சீன வெளியுறவு துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. சீன ராணுவ அணிவகுப்பை வெளிநாட்டுத் தலைவர்கள் பார்வையிடுவது இதுவே முதன்முறையாகும்,

சீன மக்கள் குடியரசு 1949-ல் உதயமானதைத் தொடர்ந்து ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ராணுவ அணிவகுப்பை நடத்தி வருவதை சீனா வழக்கமாகக் கொண்டிருக்கிறது. கடந்த 2009 ல் இதுபோன்ற மாபெரும் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக