வெள்ளி, ஜூன் 03, 2011

சுனாமி பாதிப்பு தீரும் வரை பதவியில் இருப்பேன்'

டோக்கியோ : ஜப்பான் பிரதமர் நயோட்டாகான் மீது கொண்டு வரப்பட்ட, நம்பிக்கையில்லா தீர்மானம், தோல்வியடைந்தது. ஜப்பானில், கடந்த மார்ச் மாதம், சுனாமி ஏற்பட்டதில், புக்குஷிமா உள்ளிட்ட பகுதிகள், அடியோடு அழிந்தன. இங்குள்ள, அணு மின் நிலையங்கள் சேதமடைந்து, கதிர்வீச்சு வெளியானது.
 சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய, பிரதமர் நயோட்டாகான், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களும் புகார் கூறினர்.
இந்நிலையில், ஜப்பான் பார்லிமென்டில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், பிரதமர் நயோட்டாகான் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம், தோல்வியடைந்தது. பார்லிமென்டில், நயோட்டாகான் குறிப்பிடுகையில், "சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் வரை, பிரதமர் பதவியில் இருக்கிறேன்; அதன் பின், பதவி விலகுகிறேன்' என்றா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக