செவ்வாய், ஜூன் 14, 2011

டெல்லி:ஆயுத வியாபாரி கமலா கைது-ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு தொடர்பா?

kamala, புதுடெல்லி:இந்திய தலைநகர் டெல்லியில் ஆயுத வியாபாரியான கமலா என்ற பெண்மணியும் அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டெல்லி மற்றும் என்.சி.ஆரில் நவீன ஆயுதங்களை கடத்தி வியாபாரம் செய்யும் கும்பல் என க்ரைம் டி.சி.பி அசோக் சந்த் தெரிவித்துள்ளார்.
கமலா என்று அழைக்கப்படும் மமதாவும், அவரது உதவியாளர் நவீனும் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். கணவனை இழந்த கமலா பல வருடங்களாக ஆயுத வியாபாரம் நடத்திவருகிறார். ரகசிய தகவலை அடுத்து டெல்லியில் கஞ்ச்வாலா பகுதியில் இருந்து இவரை கைது செய்யும் பொழுது ஏழு ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றினர்.
விசாரணையின் போது நிழலுக கும்பலுக்கு ஆயுதம் விற்பதாகவும், மத்திய பிரதேச மாநிலம் லால்பாகில் இருந்து ஆயுதங்கள் கிடைப்பதாகவும் கமலா வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இவருக்கு ஆயுதங்களை விற்பவர் தலைமறைவாகிவிட்டார் என போலீஸ் கூறுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கு வெட்டவெளிச்சமானது.
குண்டுவெடிப்புகளுக்கு சூத்திரதாரியான சுனில் ஜோஷி ம.பியில் வைத்து ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளாலேயே கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கமலாவின் வாக்கு மூலத்தில் மத்திய பிரதேச மாநிலம் லால்பாகில் இருந்து ஆயுதங்கள்
சப்ளை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஆகவே ஹிந்துத்துவா தீவிரவாதிகளுடன் இவருக்கு ஏதேனும் தொடர்பு இருப்பது குறித்து போலீஸ் விசாரணை செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது, 
thoothu online
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக