ஹிந்துத்துவா வெறியர்கள் நிகழ்த்திய இப்படுகொலையில் மஜீத் மியான் என்பவர் மட்டுமே உயிர்தப்பினார். இவரது குடும்பத்தினர் 13 இச்சம்பவத்தில் எரித்துக் கொலைச் செய்யப்பட்டனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டுக் கைதான 47 பேர் மீது ஆனந்த் நகரில் அமைக்கப்பட்ட சிபிஐ சிறப்பு கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், கடந்த திங்கள்கிழமையன்று 23 பேர் குற்றவாளிகள் என்றும், 23 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்தது. ஒருவர் விசாரணையின்போதே இறந்து போய்விட்டார். தற்போது தண்டனை வழங்கப்பட்ட 23 பேரும் ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டது. அதில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேருக்கும் தலா ரூ. 5800 அபராதம் மற்றும் 7 ஆண்டு தண்டனை பெற்ற ஐவருக்கும் தலா ரூ. 3800 அபராதமும் விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த இனப் படுகொலைகளில் 9 கூட்டுப் படுகொலைகளை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவற்றில் ஏற்கனவே 33 பேர் கோரமாக கொலைச் செய்யப்பட்ட சர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தற்பொழுது 2-வது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக