கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஆஃப்கானின் தலைநகரான காபூலின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பும், வெளிநாட்டு தூதரகங்களின் பல திசைகளிலும் துப்பாக்கிச்சூடும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அரசுப் படைகளுக்கும், தாலிபான் போராளிகளுக்கும் இடையேயான மோதல் துவங்கியது. இத்தாக்குதலில் 36 போராளிகளும், எட்டு ஆஃப்கான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாகவும், 44 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் எ.எஃப்.பி செய்தி நிறுவனம் கூறுகிறது.
ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவரவில்லை.
இத்தாக்குதல் தங்களின் வசந்தகால தாக்குதலுக்கான துவக்கம் என்று தாலிபான் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக