இது குறித்து ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ தலைவர் ரவூஃப் ஹக்கீம் கூறியது: போராட்டம் பரவி வருவதை நாங்கள் பார்க்கின்றோம். தயவுசெய்து அமைதி காக்குமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரம் மிக்க ஒரு புத்தத் துறவி திடீரென ஏப்ரல் 20-ம் தேதி மஸ்ஜிதுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். அவர் மஸ்ஜிதை இடம் மாற்ற வேண்டுமெனக் கோரினார். ஏனெனில், அது புத்தர்களின் புனித இடமாக அறிவிக்கப்பட்ட பகுதி என்பதால் மஸ்ஜிதை மாற்றக் கோரினார்கள். எங்களது கொள்கை முடிவெடுக்கும் கமிட்டி வெள்ளிக்கிழமை கூடியது.
அப்போது மஸ்ஜிதை விவகாரம் குறித்து விவாதித்தோம். நாங்கள் அதிபரை சந்திக்க ஆவலாக உள்ளோம். முஸ்லிம்கள் அதிகம் உள்ள கிழக்கு மாகாணப் பகுதியில் முஸ்லிம்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசாங்க உயர்மட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டது. ஆனால், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் தீவிரபோக்குடைய சக்திகள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொள்வதற்கு இடம்தராத வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும் என்றார் ரவூஃப் ஹக்கீம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக