புதன், மே 25, 2011

ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பின் தாக்கம் : மூடப்படும் பிரிட்டிஷ், ஜேர்மனிய விமான நிலையங்கள்!

ஐஸ்லாந்தில் Grimsvotn எரிமலை வெடிப்பில் எழுந்த சாம்பல் புகை,  அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து உட்பட ஐரோப்பாவின் வடபகுதி வான் பரப்பை ஆக்ரமித்துள்ளதால், தமது விமான நிலையங்கள் பலவற்றை தொடர்ந்து மூடிவருவதாக ஜேர்மனியும், இங்கிலாந்தும் அறிவித்துள்ளன.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், ஐஸ்லாந்தின் இஜப்ஜாலாஜோகுல் எரிமலை வெடித்து புகையை கக்கியதால், ஐரோப்பிய வான்பரப்பு விமான சேவைகள் முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தன.

இப்புதிய எரிமலை வெடிப்பும், அதே போன்றதொரு தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற அச்சம் அதிகரித்துள்ளது. ஜேர்மனியின் Bremen விமானநிலையம் இன்று காலை 5.00 மணி முதலும், Hamburg விமான நிலையத்தில் இன்று காலை 6.00 மணி முதலும் மூடப்பட்டுள்ளன.

டச்லாந்தின் KLM விமான சேவை, அயர்லாந்தின் Aer Lingus, பட்ஜெட் ஏர்லைன்ஸின் Easy Jet மற்றும் Ryanair விமான் சேவை என்பனவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று புதன்கிழமை, சுமார் 500 விமானங்கள் இடைநிறுத்தப்படலாம் எனவும், இதனால், 29,000 ற்கு மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை Grimsvoeten எரிமலை வெடிப்பினால் நோர்வே, டென்மார்க் விமான சேவைகளும் சிறிதளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக