சனி, மே 21, 2011

சிறுபான்மையினருக்கு நலத்திட்டங்களை தயார் செய்ய நீதிபதி சச்சாரிடம் ஆலோசனை-மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

mamta, கொல்கத்தா:மேற்கு வங்காள மாநிலத்தில் 34 ஆண்டுகளாக நீடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிச கட்சியின் ஆட்சியை அகற்றிவிட்டு முதல்வராக பதவியேற்றுள்ள மம்தா பானர்ஜி பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளார். முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளைக் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர்.
அப்பொழுது அவர் கூறியதாவது:விருப்பம் இல்லாத விவசாயிகளிடம் இருந்து சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட 400 ஏக்கர் நிலம் திரும்ப அளிக்கப்படும். இது தான் மேற்கு வங்க அமைச்சரவையின் முதல் முடிவு மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஜங்கல் மஹால் பகுதிக்கு சிறப்புத் பொருளாதாரத் திட்டத்தை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும்.
டெல்லியில் பிரதமர் அலுவலகம் இருப்பது போன்று கொல்கத்தாவில் விரைவில் முதல்வர் அலுவலகம் அமைக்கப்படும்.
இதன் மூலம் வளர்ச்சித் திட்டங்களை விரைந்து மேற்கொள்ள முடியும். சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படும். மாநிலத்தில் சட்டம், ஒழுங்குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அரசியல் விவகாரங்களால் கைது செய்யப்பட்டோர் குறித்து ஆய்வு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். வாரத்தில் சனிக்கிழமை அமைச்சர்கள் உள்பட அனைவருக்கும் கட்டாய செயல்தினமாகும். சிறுபான்மை மக்களுக்காக நலத்திட்டங்களை உருவாக்க நீதிபதி சச்சாரின் உதவி தேடப்படும். இவ்வாறு மம்தா கூறினார்.
thoothu online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக