சனி, மே 21, 2011

கோரிக்கைகள் நிறைவேறும் வரை பின்வாங்கமட்டேன்-மாலேகான் இளைஞர் அப்தாப்

Aftab Aalam on hunger strike, மாலேகான்:மாலேகானை சேர்ந்த இளைஞர் அப்தாப் ஆலம் என்பவர் கடந்த மே 16 ஆம் தேதியிலிருந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவினாஷ் குமார் மாலேகானிலிருந்து இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், அமைதியான முறையில் போராடும் மக்கள் மீது பொய்யாக போடப்பட்டு இருக்கும் அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறவேண்டும் எனவும்,  வேறு எந்த வழக்கும் அவர்கள் மீது சம்மந்தமில்லாமல் தொடரக் கூடாது எனவும் பல வேண்டுகோள்களை முன் வைத்து, உண்ணாவிரதம் இருந்ததால் அவரது உடல் நிலை மோசமான நிலையை அடைந்துள்ளது.
இதனால் 2 நாட்களுக்கு முன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட அவர், அவருக்கு தரப்படும் சிகிச்சைகளை ஏற்க மறுத்து அங்கிருந்து தப்பி உள்ளார். மீண்டும் நேற்று மாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைகளை தொடர்ந்து ஏற்க மறுக்கிறார்.
இதனை தொடர்ந்து அப்தாப் ஆழம் உம்மிட்.காம்  என்ற இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, தாசில் தாரின் வேண்டுகோளின் பேரில் நான் மருத்துவமனைக்கு சென்றேன், ஆனால் வெறும் 2 மணி நேரத்தில் சிகிச்சை முடியும் என்று சொன்னதின் காரணமாகவே நான் மருத்துவ மனைக்கு செல்ல சம்மதித்தேன். ஆனால் அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக அங்கு தொடர்ந்து இருக்க வைக்க முயற்சித்ததால் நான் நேற்று இரவு 11 மணி அளவில் மருத்துவ மனையை விட்டு வெளியேறினேன்”
மேலும் நிதர்மி சங்கத்னா என்ற மனித உரிமை அமைப்பை சேர்ந்த புளுன்ந் இக்பால் தெரிவித்தது, நேற்று மாலை அப்தாப் ஆலமை காண வந்த தாசில்தார், அவரது உடல் நிலையை கண்டு உடனடியாக இவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட வேண்டும் என்ற அவரது வேண்டுகோளின் பேரில் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தோம், அவரை விரைவில் விட்டு விடுவதாகவும் தெரிவித்தனர். அவரை தொடர்ந்து மருத்துவ மனையில் இருக்க முயற்சித்ததால் அவர் அங்கு இருந்து வெளியேறி உள்ளார்.
கடைசியாக தெரிவித்த அப்தாப், என்னுடைய வேண்டுகோள்கள் நிறைவேறும் வரை என்னுடைய உண்ணாவிரதம் சாகும் வரை தொடரும் என்று, தன் வேண்டுகோளிலிருந்து சிறிதும் பின் வாங்காமல் நிலைத்து நிற்கும், நியாயத்திற்காக போராடும் அந்த இளைஞர் தெரிவித்தார்.
thoothuonline

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக