வெள்ளி, மே 30, 2014

தலித்பெண்கள் கற்பழித்துக்கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு மாயாவதி வலியுறுத்தல்

தலித்பெண்கள் கறிபழித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாயாவதி உ.பி. அரசை கடுமையாக சாடியுள்ளார். உத்தர பிரதேசத்தில் உள்ள பதான் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இரண்டு மைனர் பெண்களை கும்பலாக சேர்ந்து கற்பழித்து தூக்கில் போட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு போலீசார் உள்பட ஏழு பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக போலீசார் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன் அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. குற்றவாளிகளில் 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியதாவது:-

தலித் பெண்கள் இருவர் கற்பழித்து தூக்கில் போட்டுக்கொன்ற கொடூரமான இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற மத்திய அரசு உடனே உத்தரவிட வேண்டும்.

உ.பி.யில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கவர்னர் உடனடியாக உ.பி.யில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்யவேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக