வெள்ளி, மே 23, 2014

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 19 பேர் 499 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தனர்

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கடந்த மார்ச் 26–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 9–ந்தேதி வரை நடை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வை பள்ளிகள் மூலம் 10.38 லட்சம் மாணவர்களும் தனித் தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவ–மாணவிகளும் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை கல்வி இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. 
பள்ளி கல்வித்துறை வரலாற்றில் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் முதன்மை பெற்று சாதனை படைத்துள்ளனர். மாநில அளவில் முதல் இடத்தை 19 மாணவ– மாணவிகள் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மொத்த மதிப்பெண்ணான 500–க்கு தலா 499 மதிப் பெண்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர். அந்த 19 சாதனை மாணவர்களின் பெயர் மற்றும் அவர்களது பள்ளி விபரம் வருமாறு:– 

1. ஆர்.அக்சயா–499, ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரி குலேசன், தர்மபுரி. 

2. டி.என்.பஹீரா பானு– 499, அரசு உயர்நிலைப் பள்ளி பத்தமடை, நெல்லை மாவட்டம். 

3. ஏ.தீப்தி–499, செந்தில் மெட்ரிக்குலேசன், தர்மபுரி. 

4. ஏ.தீப்தி–499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி. 

5. எஸ்.காவ்யா–499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, கிருஷ்ணகிரி. 

6. ஆர்.கயல்விழி–499, செந்தில்மெட்ரிக்குலேசன், தர்மபுரி. 

7. என்.கீர்த்திகா–499, வான்மதி மெட்ரிக்குலேசன், கள்ளக்குறிச்சி. 

8. ஜி.கீருத்திகா–499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி. 

9. எம். மகேஷ் லக்ரு–499, பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை.

10. பி.மைவிழி–499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி. 

11. பி.கே.ரேவதி அபர்னா– 499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி. 

12. ஏ.சஞ்சனா–499, எஸ்.பி.எச். ஜெயின் பள்ளி, மேலூர், மதுரை. 

13. எஸ்.இ.சந்தியா–499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி. 

14. பி.எஸ்.சந்தியா–499, அனிதாகுமரன் மெட்ரிக் குலேசன் மேல்நிலைப்பள்ளி, தண்டுபத்து தூத்துக்குடி மாவட்டம். 

15. எம்.ஷரோன் கரீஷ்மா– 499, டாக்டர் ஆர்.கே.வி. மெட்ரிகுலேசன், சாத்தூர்.

16. ஆர்.ஸ்ரீவந்தனா–499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி. 

17. ஆர்.ஸ்ரீரத்னாமணி–499, சத்ரிய பெண்கள் மேல் நிலைப்பள்ளி, விருதுநகர். 

18. எம்.சுப்ரிதா–499, பாரத் மான்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி, தென்காசி. 

19. எஸ்.வர்ஷினி–499, விவேகம் பெண்கள் உயர் நிலைப்பள்ளி, தாராபுரம், திருப்பூர். 

மாநிலத்தில் முதல் இடத்தை கைப்பற்றிய 19 பேரில் 18 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சுக்கிரன்பட்டி பிருந்தாவன் பள்ளி மாணவர் மகேசு மட்டுமே முதல் 19 பேரில் மாணவர் ஆவார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக