வியாழன், மார்ச் 29, 2012

எங்களுக்கு கூடங்குளத்துல இருந்துதான் கரண்ட் வேணும் !

   இந்த வருடத்தில் பண முதலைகள் ஏழைகளிடம் இருந்து பணத்தை சுரண்டுவதற்கான‌ மற்றொரு வாய்பு தொடங்க இருக்கிறது. ஐ.பி.எல் என்ற சூதாட்டப் போட்டியே அது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் அன்றாட சோற்றுக்கே வழியில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்க ஐ.பி.எல் போட்டி மிக அவசியமான ஒன்றுதான். இப்போட்டிக்காக வீரர்கள் ஏழம் விடப்படுவதும், விளம்பரம் என  பல்வேறு தரப்புகளில் பணம் புகுந்து விளையாட இருக்கிறது.
இவர்கள் எக்கேடும் கெட்டுப்போகிறார்கள் என்று இருந்துவிட முடியாது. மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி மக்கள் விரோத ஆட்சியே நடைபெற்று வருகிறது என்பதை மக்களுக்கு விழங்க வைக்கவே இத்தகைய பதிவுகள்.


தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒரு முறையேனும் 8 மணி நேரமும் துண்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல பகுதிகளில் தினமும் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பயங்கர மின்சார தட்டுப்பாடு நிலவி வருகிறது எனவும், கூடங்குளத்தில் அணு உலை திரக்கப்பட்டால் தான் இத்தகைய மின்சார தட்டுப்பாட்டை போக்க இயலும் என்ற ரீதியில் தமிழக அரசு மக்களை நம்ப வைக்க முயற்ச்சி செய்து வருகிறது.


ஆனால் தற்போது துவங்க இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 800 கிலோவாட் மின்சாரத்தை உபயோகபடுத்தி
இரவு பகல் ஆட்டமாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. மொத்தம் 76 போட்டிகள், குறைந்த பட்சம் ஒரு போட்டி 4 மணி நேரம் நடக்கும்.


சென்னையில் மட்டும் 10 போட்டிகள் நடக்கிறது. பார்த்து கூத்தடிக்க
நுழைவு கட்டணம் 500 முதல் 50000 ரூபாய்க்கு மேல் வரை வசூலிக்கப்படுகிறது.
நாடு கடும் மின்சக்தி தட்டுபாட்டில் இருக்கும் போது கூட எரிசக்தி சேமிப்பு பற்றிய அக்கறை இல்லாத அரசியல்வாதிகளுக்கு 
எவன் அழிந்தாலும் கவலை இல்லை மின்சாரம் மட்டும் கூடங்குளத்தில் இருந்துதான் வேண்டும்என்ற ரீதியிலேயே அரசுகள் செயல்பட்டு வருவதை மக்கள் உணர்ந்து கொண்டு இத்தகைய அரசியல்வாதிகளின் நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக