இந்த நிலையில், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட அவரது உடலை, திருச்சியில் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
திருவளர்ச்சோலை என்ற இடத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டது என்றும், அவரது உடலில் கத்திக் குத்து உள்ளிட்ட காயங்கள் இருந்தன என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருவளர்ச்சோலை என்ற இடத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டது என்றும், அவரது உடலில் கத்திக் குத்து உள்ளிட்ட காயங்கள் இருந்தன என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தற்போது, ராமஜெயத்தின் உடல், திருச்சி அரசு பொது மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2006 மே மாதம் முதல் 2011 மே மாதம் வரையில், தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர், கே.என்.நேரு. இவருக்கு ராமஜெயம், மணிவண்ணன், ரவிச்சந்தி ரன் ஆகிய மூன்று சகோதர்கள்.இவர்களில் ராமஜெயம் ‘ஜனனி குரூப்ஸ்’ என்ற பெயரில் கிரானைட், கல் குவாரி என்று பல பிசினஸ்கள் செய்து வந்தவர்.
ராமஜெயம் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ராமஜெயம் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பையும், அதிர்சசி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக